2020 special summary revision of electoral rolls: Registration with the personalities of all the party leader in the field of Discuss!

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2020 ஆண்டிற்கான பணிகள் குறித்து, அங்கீகாரம் பெற்ற அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் வே.சாந்தா முன்னிலையில் பதிவுத்துறை தலைவர் ஜோதிநிர்மலாசாமி தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் ஆபிசில் நடந்தது.

இந்திய தேர்தல் ஆணையம் 2020ம் ஆண்டு ஜன.1.-யை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த டிச.23 முதல் வரும் ஜன 22 வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2020 பணிகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பதிவுத் துறை தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

பதிவுத்துறை தலைவர் பி.ஜோதிநிர்மலாசாமி தனது முந்தைய கூட்டத்தில் தெரிவித்த ஆலோசனையின் பேரில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி மேற்கொண்டு தேர்தல் ஆணையத்தால் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்காக தேசிய வாக்காளர் தினத்தன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், பாராட்டு சான்றிதழும், கேடயமும் பெற்ற கலெக்டர் வே.சாந்தாவிற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துகொண்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் – 2020 தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது முதல் நாளது வரை பெறப்பட்ட படிவங்கள் மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு முடிவு செய்திட ஆலோசனை வழங்கினார். மேலும், தகுதியுள்ள நபர்கள் எவரும் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சி.ராஜேந்திரன், கலெக்டர் பி.ஏ (பொது) அ.கோ.ராஜராஜன், ஆர்.டி.ஓ. தி. சுப்பையா, பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் வட்டாட்சியர்கள், அலுவலர்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் வக்கீல் செந்தில்நாதன், பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த வக்கீல் காமராஜ், பாஜக தலைவர் ஆர்.சி சந்திரசேகரன், பெரம்பலூர் அதிமுக நகர செயலாளர் ராஜபூபதி, கம்யூனிஸ் கட்சி பிரமுகர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!