4th anniversary cultural festival at Ramanathapuram Krishna International School

ராமநாதபுரம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் ஆண்டு கலை விழா 2018 போட்டியில் 600 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ராமநாதபுரம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில்அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டுதோறும் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு கலைதிறன் போட்டி நடைபெறும்.

இதன்படி இந்தாண்டு கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் ஆண்டு கலைவிழா 2018 போட்டி நடந்தது. இதில் வர்ணம் தீட்டுதல், ஓவியம், நடனம், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், பேச்சு போட்டி, ரங்கோலி கோலமிடுதல் போன்ற பல்வேறு போட்டிகள் வயது விகிதாச்சாரப்படி நடந்தது.

போட்டியில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி, செய்யது அம்மாள் மெட்ரிக், எம்.ஜி.பப்ளிக் உட்பட மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது தனித்திறைமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு போட்டிக்குமான நடுவர்கள் நன்கு சீராய்ந்து திறம்பட திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர். கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன் கலைவிழா 2018 போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பள்ளி செயலாளர் ஜீவலதா முதல்வர் டாக்டர் முத்துக்குமார் உட்பட பலர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர். விழாவில் பள்ளிகள் தவிர தன்னார்வத்துடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெற்றோர்கள் தாங்களாக விரும்பி தாமாக முன்வந்து போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மதநல்லிணக்கத்திற்காகவும், மாணவ மாணவிகளின் தனி்த்திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்தில் நடத்தும் கலைவிழா போட்டியில் ஆண்டுதோறும் பங்கேற்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.

மேலும் இதில் பங்கேற்கும் மாணவர்கள் தெரிவிக்கும் போது இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனை செய்ய வேண்டும் என்ற தன்னம்பிக்கை தங்களுக்கு வருவதாகவும், இங்குவருவதன் முலம் பல்வேறு விதமான கலைகளை தாங்கள் அறிந்து அதிலும் கவனம் செலுத்தி திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை வருவதாக தெிரவித்தனர்.

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன் தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பயிலும் மாணவர்களிடம் திறமைகள் அதிகளவில் உள்ளன. அதை வெளிப்படுத்த தெரியாமல் அவர்கள் தங்களுக்குள் திறமைகளை புதைத்துவிடுகின்றனர். இதற்காகவே நாங்கள் ஆண்டுதோறும் இதுபோன்ற கலைவிழா நடத்தி ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையை ெவளிப்படுத்த வாய்ப்பு தருகிறோம்.

இதன் முலம் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் திறமை வெளிப்படுத்தப்பட்டு இன்று மாவட்ட அளவிலும் நாளை மாநில அளவிலும் வெளி கொணர முடிகிறது. இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

தேசிய அளவில் சாதிக்க வேண்டிய பல மாணவர்களின் திறமைகளை நாங்கள் இதுபோன்ற கலைவிழா முலம் வெளி கொணர உள்ளோம். இதில் பள்ளிகள் மட்டுமின்றி மாணவர்களின் உடன் பிறந்த சகோதரர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். ஆண்டுதோறும் இந்த கலைவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் உறுதுணையாக உள்ளனர், என்றார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!