5 Inspectors in RK Nagar constituency Workplace Transfer: Police Commissioner orders

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தொகுதியில் தெருவுக்கு தெரு 300 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து தேர்தல் விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் காவல் ஆய்வாளர்கள் 5 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ஆர்.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் பட்டினப்பாக்கம்இன்ஸ்பெக்டராகவும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த கொடிராஜ் ஆர்.கே. நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!