A fine of Rs 5 lakh was imposed on the jury in Jhusi, collector information

நாமக்கல் : ஜவ்வரிசியில் கலப்படம் செய்தவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்ததில் உணவுக்கு உகந்தது அல்லாத பொருள் என்று அறிக்கை வரப்பெற்றால் அவற்றின் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் இதுவரை 222 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 84 வழக்குகளுக்கு தீர்ப்பு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மூலமாக இதுவரை ரூ.15 லட்சத்து 72ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு அரசு கணக்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மேலும் ஒரு வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு ஆய்வு மேற்கொண்டதில் ஜவ்வரிசி தயாரிப்பதற்காக ஒரு தனியார் சேகோ பேக்டரி நிறுவனத்தில் மரவள்ளி கிழங்கு மாவுடன் கலப்பதற்காக மக்காச்சோளமாவு வைத்திருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்து.

இந்த தகவலை அடுத்து ஆய்வு மேற்கொண்டதில் அங்கு சுமார் 21 டன் மக்காச்சோளமாவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நியமன அலுவலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலரால் அந்த பொருளை மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு அறிக்கையில் கலப்படப் பொருள் என பெறப்பட்டது. எனவே, அதனை தொடர்ந்து சேகோ பேக்டரி உரிமையாளர் மீது தீர்ப்பு அலுவலர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு முடிவுக்கு வந்து தற்போது தீர்ப்பு வழங்கப்படடுள்ளது.அந்த தீர்ப்பில் மாவட்ட தீர்ப்பு அலுவலரால் உணவு பாதுகாப்பு துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் மற்றும் உரிமையாளர் மீது ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு கலப்படம் செய்ய நினைப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைய வேண்டும். கலப்படம் செய்தால் இதற்கு மேலும் அதிகமாக அபராதம் விதிக்கப்படும்.

எனவே, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் இதனை பாடமாக எடுத்து இனிவரும் காலங்களில் அவ்வாறு கலப்படம் செய்வதையோ மற்றும் கெமிக்கல் பயன்படுத்துவதையோ அறவே ஒழித்து சுத்தமான ஜவ்வரிசி செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2009 & 2015 - © 2018 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!