Awards should be given to the journalist who invented Aadar fraud … Edward Snowden!
ஆதார் கார்ட் மோசடியை கண்டுபிடித்த பத்திரிக்கையாளருக்கு விருது கொடுக்க வேண்டும். ஆதார் அமைப்பை கைது செய்ய வேண்டும் என்று விக்கி லீக்ஸ் எட்வர்ட் ஸ்னோடென் கூறியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை உலகத்தில் இருக்கும் பெரிய தலைவர்கள் எல்லோரையும் விக்கி லீக்ஸ் இணையதளம் மிரள வைத்துக் கொண்டு இருந்தது. எட்வர்ட் ஸ்னோடென் என்ற தனி மனிதன் எல்லா நாட்டு தலைவர்களையும் தன் கை அசைவில் வைத்து இருந்தார். தற்போது எட்வர்ட் ஸ்னோடென் மொபைல் போன் கூட இல்லாமல் ரஷ்யாவில் தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில் இவர் ஆதார் அமைப்பை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆதார் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட ஸ்டிங் ஆப்ரேஷனை வைத்து அவர் இப்படி பேசி உள்ளார். ஆதார் அமைப்பே ஒரு மோசடி என்று அவர் கூறியுள்ளார். யார் கேட்டாலும் ஆதார் விவரத்தை வெளியிடும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றை தி டிரிபியூன் என்று ஆங்கில பத்திரிக்கை ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் கண்டுபிடித்தது. இந்த பத்திரிக்கையை சேர்ந்த ராச்னா கைரா என்பவர் ஸ்டிங் ஆப்ரேஷனை செய்தார். அந்த வாட்ஸ் ஆப் குழு எல்லோருடைய ஆதார் விவரத்தையும் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராச்னா கைரா மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது. வெவ்வேறு பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த வாட்ஸ் ஆப் குழுவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தற்போது எட்வர்ட் ஸ்னோடென் டிவிட் செய்துள்ளார். அதில் ஆதார் கார்ட் மோசடியை கண்டுபிடித்த பத்திரிக்கையாளர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவருக்கு விருது கொடுக்க வேண்டும்.
அரசு உண்மையில் நீதியை நிலைநாட்ட விரும்பினால் இதற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும். இதற்கு காரணமான நபர்கள் வேறு யாரும் இல்லை. ஆதார் அமைப்புதான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டு உள்ளார். இதற்கு முன்பே இவர் ஆதார் குறித்து எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். மக்களுக்கு தெரிந்தே அவர்களின் தகவல்களை அரசு திருடுவதற்கு பெயர்தான் ஆதார் என்று தெரிவித்தார். இது எப்போதும் மக்களின் நலனுக்கானது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.