Awareness Workshop on NEET & IIT Examination on behalf of Ramanathapuram Krishna International School

இராமநாதபுரம் மாவட்டம் அம்மா பூங்கா எதிரில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை கிருஷ்ணா இன்டர்நேசனல் பள்ளியின் சார்பாக NEET மற்றும் IIT தேர்வுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.

இப்பயிலகத்தை இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் இரவிச்சந்திர இராம வன்னி , கிருஷ்ணா பள்ளியின் சேர்மன் மாதவனூர் கிருஷ்ணன், தாளாளர் கணேச கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தார் முன்னதாக கிருஷ்ணா பள்ளியின் செயலாளர் ஜீவலதா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார், இந்த பயிலரங்கத்தில் இம்பல்ஸ் அகாடமியின் மேலாண்மை இயக்குநர் சங்கர் , நீட் ஐஐடி தேர்விற்கு எப்படி படிக்க வேண்டும், என்ன பாடங்களை படிக்க வேண்டும் தேர்வில் வினாத்தால் எவ்வாறு அமைந்திருக்கும்,

தேர்வில் எவ்வாறு எளிதாக வெற்றி பெற வேண்டும், நாட்டில் எத்தனை மருத்துவம் மற்றும் ஐஐடி கல்லூரிகள் உள்ளன இங்கு எவ்வாறு சேருவது, அட்மிஷன் மற்றும் கட் ஆப் ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளித்தார் இப்பயிலரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் கிருஷ்ணா பள்ளியின் முதல்வர் முத்துகுமார் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!