‘Biweekly Movement for Rural Resources & cleanliness “awareness Rath & Rally: Collector inaugurated.

இராமநாதபுரம் அரண்மனை சாலை அருகே இன்று மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ‘கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம்” குறித்த விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது கேணிக்கரை வழியாக சென்று அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.

மத்திய, மாநில அரசுகள் கிராமப்புற உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக பிரகடனம் செய்திட ஏதுவாக 01.10.2017 முதல் 15.10.2017 வரையில் அனைத்து ஊராட்சிகளிலும் ‘கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கமாக கடைப்பிடித்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்புற தூய்மைப்பணிகள் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணிகள், திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பணிகள் ஆகியவற்றை மேலும் தீவிரப்படுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் இப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பேரணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மேலும், இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு ரதமானது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் நேரடியாக சென்று தூய்மைப் பணிகள் மற்றும் மகளிர் திட்ட அலுவலகத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் விதமாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு தொழிற்திறன் பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய தொழிற்திறன் பயிற்சியில் கலந்து கொள்ள இளைஞர்கள் விண்ணப்பம் செய்திட ஏதுவாக kaushal panjee என்ற கைபேசி செயலி புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு ரதம் செல்லும் இடங்களில் இளைஞர்களுக்கு இந்த கைபேசி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தொழிற்திறன் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தேவைப்படும் இளைஞா;களுக்கு தொழிற்திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும் இளைஞர்கள் http://www.kaushalpanjee.nic.in என்ற இணையதள முகவரியில் நேரடியாகவும் தொழிற்திறன் பயிற்சிகளுக்கு விண்ணப்பித்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!