Cancel to the Walmart – Flipkart deal – Vellaiyan

பன்னாட்டு ஆன் லைன் தொழில் நிறுவனங்களான வால்மார்ட்- பிளிப்கார்ட் ஒப்பந்தத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,சில்லரை வணிகத்தில் அந்திய நேரடி முதலீட்டை அனுமத்திப்பது லட்சக்கணக்கான சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் என குற்றம் சாட்டினார்.

உள் நாட்டு வணிகத்தின் மீதும்,வணிகர்கள் மீதும் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பிளிப்கார்ட்- வால்மார்ட் உடன்பாட்டை தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு உடனியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.

சிறு வணிகர்களின் வாழ்க்கைக்கு எதிரான இந்த போக்குக்கு சில அரசியில் கட்சிகளும் துணை நிற்பதாக வெள்ளையன் குற்றம்சாட்டினார்.மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதற்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த இருப்பதாகவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பன்னாட்டு நிறுவனங்களை ஒடுக்கும் நேரடி நடவடிக்கைகளில் தங்களது வணிகர் சங்க பேரவை களம் இறங்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!