Coordination Committee Meeting on Food Supply and distribution in Perambalur

உணவு பாதுகாப்பு விதிபடி, பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்டத்தினை சுமூகமான முறையில் செயல்படுத்துவதற்கும், அத்தியாவசியப்பொருட்கள் வழங்குவதில் ஏதேனும் புகார்கள் வரப்பெற்றால் அதன்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கும் வட்ட, மாவட்ட அளவிலும் மற்றும் நியாய விலைக்கடைகள் வாரியாகவும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களைக் கொண்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, தலைமையில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பொது விநியோகத்திட்ட பொருட்கள் எவ்வித சுணக்கமும் இல்லாமல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பணிகளை வட்ட வழங்கல் அலுவலா;கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கண்காணித்து, பொது விநியோகத்திட்ட பொருட்களை முறையாக வழங்காத விற்பனையாளர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டத்தை குறைந்தது காலாண்டிற்கு ஒருமுறை கூட்டப்பட்டு வட்ட அளவில் பெறப்படும் புகார்கள் குறித்து பெறப்படும் மனுக்கள்மீது ஆய்வு செய்யவேண்டும்.

மேலும், பொது விநியோகத்திட்ட பொருட்கள் வழங்குவதில் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், மாவட்ட குறைதீர் அலுவரிடமோ(மாவட்ட வருவாய் அலுவலர்) அல்லது மாவட்ட குறைதீர் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அலுவலரிடம் நேரடியாகவோ எழுத்து வடிவிலோ, மின்னஞ்சல், உதவி மையம், அழைப்பு மையம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ புகாரை தெரிவிக்கலாம். மேற்கண்ட புகார்கள் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அதற்கு உண்டான தீர்வை தொடர்புடைய அலுவலர்கள் அளிக்க வேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) ச.மனோகரன், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டுநர், (மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) எல்.விஜயலெஷ்மி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் த.பாண்டிதுரை, உதவி ஆய்வாளர் (குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை) மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!