Creating a workshop on behalf of the MMK Literary Team in Perambalur

பெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சியின் இலக்கிய அணி சார்பில் இரண்டு நாள் படைப்பிலக்கிய பயிலரங்கம் சனி, ஞாயிஞ ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

முதல் பயிலரங்கம் ம.ம.க மாவட்டத் தலைவர் எம்.சுல்தான் மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. பயிலரங்கத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவரும், பேராசியருமான எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

“வாசிப்பே சுவாசிப்பு” என்ற தலைப்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் காஞ்சி.ப.அப்துல் சமதும், கட்டுரை வரைவியல் குறித்து சென்னை புதுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மு.ஜாபர் சாதிக் அலியும், சிறுகதை எழுதலாம் வாங்க என்ற தலைப்பில் பவா. செல்லதுரையும், சிறுகதைக்கான களங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் அண்டனூர் சுரா-வும், தலித் கவிதையில் தலைப்பில் கவிஞர் அகவி-யும், கட்டுரைக்கான களங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் பி.தயானும், இதழ்களை அணுகும் விதம் என்ற தலைப்பில் துபாய் தினத்தந்தி செய்தி ஆசிரியர் வி.களத்தூர் கமால்பாஷா ஆகியோர் உரையாற்றினர்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை நடந்த பயிலரங்கத்தில், நிகழ்கால வரலாற்றை எழுதுதல் என்ற தலைப்பில் எழுத்தாளர் இரா. எட்வினும், கவிதை செதுக்குவது எப்படி என்ற தலைப்பில் கவிஞர் ப. செல்வக்குமாரும், எது கவிதை என்ற தலைப்பில், சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஹாஜாகனியும், எழுத்தும் சட்டங்களும் என்ற தலைப்பில் ம.ம.க. வழக்கறிஞர் அணிச் செயலாளர் ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

தமுமுக மாநிலச் செயலாளர் என்.சபியுல்லாஹ் கான் சான்றிதழ் வழங்கி நிறைவு நிகழத்தினார். ம.ம.க மாநில இலக்கிய அணிச் செயலாளர் இ.தாஹீர்பாட்சா நெறியாளராக கலந்து கொண்டார். ம.ம.க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மீரான் மொஹைதீன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!