CRPF in Kashmir Two terrorists who attacked the camp were shot dead

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாமை தாக்க வந்த 2 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப். முகாம் உள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த பகுதிக்கு 2 தீவிரவாதிகள் ஏ.கே. 47 துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். முகாமில் கண்காணிப்பு பணியில் இருந்த பாதுகாவலர் தீவிரவாதிகள் வருவதை பார்த்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இதனையடுத்து அந்த 2 தீவிரவாதிகளும் தப்பியோடினர். பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை துரத்தி சென்றனர்.

அந்த 2 தீவிரவாதிகளும் கரண் நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கினர். பாதுகாப்பு படையினர் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து தீவிரவாதிகள் தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இன்று காலையிலும் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இறுதியில் தீவிரவாதிகள் இருவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!