Death of a child declared dead after one week: Request to arrest doctors!

டெல்லியில் தனியார் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை ஒரு வாரத்துக்கு பிறகு உயிரிழந்தது.

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் என்னும் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி அஷிஸ்குமார் என்பவரின் மனைவிக்கு குறைபிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பிறக்கும்போதே அவை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து அந்த குழந்தைகளை பாலீதீன் பைகளில் சுற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தைகளின் இறுதிச் சடங்கை நடத்தியபோது ஆண் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்ததால் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த குழந்தையை அருகில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக அறிவித்தது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தது. அந்த குழந்தையின் இறப்புக்கு மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அனுதாபம் தெரிவித்து உள்ளது. எனது ஆண் குழந்தை இறந்ததாக அறிவித்த 2 டாக்டர்களையும் உடனடியாக கைது செய்யவேண்டும், அதுவரை குழந்தையின் உடலை வாங்கமாட்டேன் என்று கூறி குழந்தையின் தந்தை அஷிஸ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2017 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர்.காம் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!