Discrimination in wage increases: Electricity workers strike at Perambalur

ஊதிய உயர்வில் பாகுபாடு செய்வதாக கூறி பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காலை மின் வாரிய ஊழியர்கள் மற்றும் மின் பொறியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு உள்ளிட்ட சில சங்கங்களை சேர்ந்தவர்கள் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலை நிறுத்தம் செய்த அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பிய கோரிக்கைகளாவன: ஊதிய உயர்வில் அதிகாரிகள், ஊழியர்கள் என பாகுபாடு காட்டக்கூடாது, ஊதிய உயர்வில் 2.57 கணகீட்டு காரணியை உத்திரவாதபடுத்த வேண்டும், நிலுவைத் தொகை முழுமையாக வழங்கிட வேண்டும், இரண்டு சர்வீஸ் வெயிட்டேஜ் முறையை அமல்படுத்த வேண்டும், காலநிலை பதவி உயர்வை செயல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும், மின்வாரிய பிரிப்பை மறுபரிசீலனை செய்யவும், 45 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஒப்பந்த ஊழியர்களையும், ஐ.டி.ஐ., படித்தவர்களையும் பணிக்கு அமர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எஸ்.காசிவிசுவநாதன், பி.நாரயணன், பி.பாலக்கிருஷ்ணன், ஜி. அண்ணாதுரை, ஏ.அமுதா, டி.ஆறுமுகம், ஆர்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டத் தலைவர் கண்ணன், வட்ட பொருளாளர் வி.தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் கோட்ட செயலாளர் பன்னீர்செல்வம், பெரம்பலூர் பொது கோட்ட செயலாளர் ஆர்.ராஜகுமாரன், அரியலூர் கோட்ட செயலாளர் ஏ.சார்லஸ், பி.எம்.எஸ். மாவட்ட பொருளாளர் பி. தமிழ்வாணன், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில செயற்குழு என்.சரவணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சி.ராஜகுமாரி, மற்றும், ஜி.ராஜீ, தர்மராஜீ. ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.

முன்னதாக மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் ஏ.கணேசன் , மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொருளாளர் பி.முத்துசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, அனைத்துறை ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், பொதுத்துறை சங்கம் பி.ரெங்கராஜ், ஆட்டோ சங்க மாநிலக் குழு சி.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ், தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேசன், தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மின்வாரிய புரட்சியாளர்அம்பேத்கர் அலுவலர் தொழிலாளர் விடுதலை முன்னணி, மின்வாரிய அனைத்து பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம் தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்டவைகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டன. மேலும். பெரும்பாலனோர் கருப்பு உடை அனைத்து வந்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

பெரம்பலூர் கோட்ட சி.ஐ.டியூ தலைவர் பி.நாரயணன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!