Do not use Debit Card to buy bitcoin digital currencies: City Bank Instruction

பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளை வாங்க தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களை பயன்படுத்த கூடாது என்று வாடிக்கையாளர்களுக்கு சிட்டி பேங்க் இமெயில் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேசமயம் இந்தியா போன்ற நாடுகள் டிஜிட்டல் கரன்சிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் அதில் முதலீடு செய்வது மிகவும் இடர்பாடானதாகும். இந்த நிலையில் சிட்டி பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பாக இமெயில் அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச மற்றும் உள்நாட்டிலும் ரிசர்வ் வங்கி உள்பட அரசு அமைப்புகள் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் குறித்து பொதுமக்களிடம் எச்சரிக்கை செய்து வருகின்றன. எனவே சிட்டி பேங்க்கும் பிட்காயின் வாங்க அல்லது வர்த்தகம் செய்ய வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு செய்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளை வாங்க சிட்டி பேங்கின் டெபிட் மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!