Even if the storm is weakened, Surat – the heavier breeze of heavy winds in Mumbai!

ஒக்கி புயல் வலுவிழந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒக்கி புயலால் மும்பை, சூரத் உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி மற்றும் கேரள கடற்கரையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஒக்கி புயல், அரபிக்கடலில் நகர்ந்து சென்று சூரத் அருகே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் வலுவிழந்து காணப்பட்டாலும் குஜராத் மாநிலம் சூரத், மராட்டிய மாநிலம் மும்பை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழையை கொடுத்துள்ளது.

ஒக்கி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து குஜராத்தில் பல இடங்களில் நடைபெற இருந்த பாஜக பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே பிரதமர் மோடி ட்விட்டரில் “ஒக்கி புயல் பாதிப்பு சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோளோடு தோள் நின்று அனைத்து உதவிகளையும் செய்ய தங்களை அர்பணித்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2017 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர்.காம் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!