Explain to the governor on Tamil Nadu protests: Chief Minister EPS interview

தமிழகத்தில் நடைபெறுகின்ற போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கினோம் என ஆளுனரை சந்தித்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் நியூட்ரினோ எதிர்ப்பு,ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு என போராட்டங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்நிலையில் இது குறித்து தமிழகஆளுனர் பன்வாரிலால் புராேஹித்தை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, தமிழகத்தில் நடைபெறு கின்ற போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கினோம். மேலும் காவிரி விவகாரம் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார், எங்களின் விளக்கம் ஆளுநருக்கு திருப்தி அளித்தது என்ற முதலமைச்சர், கோடைகாலத்தை முன்னிட்டு குடிநீர் பிரச்சனைகளை சமாளிப்பது குறித்தும் ஆளுநருடன் ஆலோசனை செய்ததாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!