Failure to cooperate with dengue prevention measures is fine: Ramanathapuram Collector

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக டெங்கு கொசு உருவாகும் வகையில் உள்ள இடங்கள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் கலெக்டர் நடராஜன் இறங்கியள்ளார்.

டெங்கு பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி நிர்வாக அமைப்பை சேர்ந்த 2 ஆயிரத்து 306 உட்கடை கிராமங்கள் மற்றும் பேருராட்சி, நகராட்சி பகுதிகளில் ஒட்டுமெமாத்த துாய்மை பணி மற்றும் கொசு முட்டைகள் ஒழிப்பு தொடர்பாக வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் நியினார்கோவில், மண்டபம், திருப்புல்லாணி, மற்றும் முதுகுளத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து உட்கடை கிராமங்களிலும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஊரக உள்ளாட்சி அமைப்பு மற்றும் சுகாதாரத்துறை முலம் துாய்ப்பணியுடன் இணைந்த கொசு ஒழிப்பு மற்றும் கொசு முட்டைகள் அழிப்பு பணி நடைபெற்றுள்ளது. இதே போன்று அப்பகுதிகளில் உள்ள பேருராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இப்பணி நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய முன்று நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் வீடுவீடாக சென்று டெங்கு கொசு உருவாக்கும் லார்வாக்கள் கண்டறிந்து அழித்தல் மற்றும் அவை உருவாக சாதகமாக அமைந்து கழிவு பொருட்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணி முறையாக நடைபெறுதலை கண்காணிப்பதற்காக அனநனைத்து துறை அலுவலர்களையும் உள்ளாட்சி உட்கடை கிராமங்கள் வாரியாக மற்றும் வார்டுகள் வாரியாக ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உதவி இயக்குனர்கள் மற்றும் துணை ஆட்சியர்கள் நிலையிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் திட்ட திட்ட அலுவலர் ஆகியோரும் மாவட்ட அளவில் ஆய்வு செய்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அதன்படி கலெக்டர் நடராஜன் தலைமையில் அச்சுந்தன்வயல் கிராமத்திலும் முதுனாள் கிராமத்திலும் நடைபெற்ற ஒட்டுமொத்த துாய்மைப்பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து வீடுவீடாக சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொது மக்கள் பங்ேகற்பின் அவசியம் குறித்து கலெக்டர் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து முதுனாள் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தபோது அவ்விடத்தில் அதிக அளவில் லார்வாக்கள் உள்ளது கண்டறியப்பட்டு ரு.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதம், அதற்கான தடுப்பு நடைமுறைகள், வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் துாய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசிய் குறித்து மாணவர்களுக்கு கலெக்டர் நடராஜன் எடுத்துரைத்தார்.

இதன்பின் சோழந்துார் கிராமத்தில்நடந்த சிறப்பு கிராம சபை குட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக நடைபெறும் சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பித்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி, டெங்கு பாதிப்பு, துாய்மைப்பணி மற்றும் தனிநபர் கழிப்பறை அவசியம் குறித்து விரிவாக பேசினார்.

இதேபோன்று தேவிபட்டினம், மற்றும் பட்டிணம்காத்தான் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தபோது 17 இடங்களில் லார்வாக்கள் இருந்ததுடன் சுகாதாரகேடான வகையில் வியாபாரம் செய்த வணிக நிறுவனங்கள் மற்றும் சிமென்ட் உறை தயாரிப்பாளர்கள் ஆகியோரிடம் மொத்தம் ரு.33 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறும் ஒத்துழைப்பு தர மறுக்கும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் கலெக்டர் நடராஜன் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ராமநாதபுரம் ஆர்டிஓ பேபி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை உட்பட பலர் உடன் சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!