Fever symptoms, testing should be done: Collector Natarajan Speech

காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் பொது மக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், என, கலெக்டர் நடராஜன் பேசினார்.

ராமநாதபுரம் செய்யதம்மாள் மெட்ரிக் மேல்நிலைலப்பள்ளியில் பொது சுகாதார துறையின் சார்பாக டெங்கு தடுப்பு தின உறுதிமொழி மற்றும் துாய்மை இயக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு வைரஸ் காய்ச்சலை பொறுத்த வரையில் பிற வைரஸ் காய்ச்சல் போன்று இதுவும் ஒரு சாதாரண வைரஸ் காய்ச்லே ஆகும். சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் என்ற கொசுவினால் இவ்வைரஸ் காய்ச்சல் உருவாகின்றது. ஏடிஸ் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதன் முலம் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுத்திட முடியும்.

வீட்டில் உள்ள குடிக்க மற்றும் பிற பயன்பாட்டிற்காக தேக்கி வைத்துள்ள தண்ணீர் குடங்கள், தொட்டிகள், மேல்நிலைத்தொட்டிகள், டிரம் ஆகியவற்றை கொசு புகாத வகையில் முடி வைத்தல் வேண்டும். வீட்டை சுற்றி தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் கப்புகள், உரல், மண் சட்டிகள், பழைய பாத்திரங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி மழை நீர் தேங்காத வகையில் சுத்தமாக பராமரித்திட வேண்டும். ஏடிஸ் வகை கொசு பகல் நேரத்தில் கடிக்கும் தன்மையும், அரை கி.மீ. வரை பறக்கும் தன்மையும் கொண்டது. ஆகையால் நம் வீட்டை சுத்தமாக பராமரிப்பதோடு நாம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்கும் பள்ளிகள், அலுவலகங்கள், அங்கன்வாடி ைமயங்கள் ஆகியவற்றையும் சுத்தமாக பராமரிப்பு அவசியமாகும்.

காய்ச்சல் அறிகுறி ஏற்படும் பட்சத்தில் பதற்றமடையாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று கொள்ள ேவண்டும். சுயமாக மருத்து மாத்திரைகளை கடைகளில் உட்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். மேலும் அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார மையங்களில் செவிலியர்கள், அங்கன்வாடி ைமயங்கள் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெறும் ஓஆர்எஸ் எனப்படும் சர்க்கரை கரைசலை உட்கொள்வதன் முலம் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் நீர் சத்து இழப்பை தடுத்து டெங்குவினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை எடுத்து கொள்வதன் முலம் ரத்த திட்டு அணுக்கம் குறைவதை தடுத்து டெங்குவினால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம்.

மேலும் தமிழக முதல்வர் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அரசு மற்று் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சுற்றுப்பகுதிகளை சுத்தம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கொசு ஒழிப்பு பணிகளில் அரசு அலுவலர்கள், பொது மக்கள் என அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும் என கலெக்டர் நடராஜன் பேசினார்.

விழாவில் மருத்துவபணிகள் இணை இயக்குனர் ஸ்டீபன்ராஜ், துணை இயக்குனர் குமரகுருபரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட சித்த அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

– சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!