General +2 exam results for students Sent by SMS ; Government of Tamil Nadu

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்துள்ள, செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந் தேதி வெளியாகும் நிலையில், கடந்த ஆண்டை போல இந்தாண்டும் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளும்ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

தேர்வு முடிவுகளை முன்கூட்டியே பள்ளிகள் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது

அந்தவகையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது

மேலும் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை பத்திரிகையாளர்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை இந்த ஆண்டு முதல் தேர்வுத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!