Government Bus Bus Strike Ends: TK Rangarajan registered on Twitter

அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக சி.பி.எம்.,மாநில நிர்வாகி டி.கே., ரங்கராஜன் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 8 நாட்களாக தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராடி வருகின்றனர்.இதில் நீதிமன்றம் பொங்கலை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அறிவித்தது.மேலும் அரசு பேருந்து தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுப்பதற்காக, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக சி.பி.எம்.,மாநில நிர்வாகி டி.கே., ரங்கராஜன் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உறுதியாக போராடிய தொழிலாளர்கள் அனைத்து பிரிவினருக்கும் நன்றியும் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!