Government doctors arrested by human chain protest : Doctors Union condemned.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள செய்தி:

இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் முறைகேடாக சிறப்பு மருத்துவர்களை தமிழக அரசு நியமித்ததை கண்டித்தும்,அப்பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், முது நிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 20 நாட்களாக போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று சென்னை மருத்துவக் கல்லூரி வாயில் அருகில், காவல் துறையின் அனுமதி பெற்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியாக நடந்த அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை, காவல் துறை திடீரென்று கைது செய்துள்ளது. காவல் துறையின் இந்த அத்து மீறிய ,அராஜகப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

போராடும் மருத்துவர்களை அழைத்துப் பேசி ,பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் ,காவல் துறையை ஏவி போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை, அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட மருத்துவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது, என தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2017 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர்.காம் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!