Government subsidy is not available: West Bengal is beguiling the toilet to build a toilet

மேற்கு வங்கத்தில் அன்றாட வாழ்க்கையை பிச்சை எடுத்து சமாளித்து வரும் 75 வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் கழிவறை கட்டி வருகிறார்.

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் நவ்தாபாரா கிராமத்தில் வசித்து வருபவர் ரஹிமா பீவா (75). இவர் தனது மகள் கமலா பீவாவுடன் (50) வசித்து வருகிறார். குமலா பீவா மாற்றுத் திறனாளி. 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்து விட்டதால் வேறு வழியின்றி பிச்சையெடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். ரஹிமா பீவா இதுவரை தனது வாழ்நாளில் திறந்த வெளியில்தான் இயற்கை உபாதையை கழித்து வந்தார்.

இந்நிலையில் திறந்தவெளியில் மலம் கழிப்பது உடல்நலத்துக்கு கேடு என்று அருகில் இருந்தவர்கள் ரஹிமா பீவாவிடம் அறிவுறுத்தினர். இதனையடுத்து தனது வீட்டில் கழிவறை கட்ட முடிவு செய்தார். கழிவறை கட்ட சுமார் ரூ.15 ஆயிரம் தேவைப்பட்டது. இருப்பினும் பணம் அவரது முடிவை மாற்றவில்லை. பிச்சையெடுத்து சேர்த்து வைத்து இருந்த பணத்தை கொண்டு கழிவறை கட்டுவதற்காக மண் மற்றும் செங்கல் போன்றவற்றை வாங்கி விட்டார். கொத்தனார்களை வைத்து தற்போது கழிவறை கட்டும் பணியை தொடங்கி விட்டார்.

கழிவறை கட்டி முடித்த பிறகு அவர் வசித்து வரும் மண் வீட்டில் செங்கல்களால் கட்டப்பட்ட முதல் கட்டிடமாக இது இருக்கும். சில காரணங்களால் கழிவறை கட்டுவதற்கு மாநில அரசு வழங்கும் மானியத்தை பெறுவதற்கான தகுதிகள் அவருக்கு இல்லாததால் மானிய தொகையும் கிடைக்கவில்லை. இருப்பினும் அரசு சார்பான உதவிகள் கிடைக்க என்ன செய்ய முடியுமோ அதனை அவருக்கு செய்வோம் என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!