Government work for the hands of the AIADMK? Minister Jayakumar explained

அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கு அரசு வேலை என்ற செங்கோட்டையனின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் தமிழக அரசு உள்ளது. ஜெயலலிதா நினைவு மண்டபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன; அதற்கு பிரதமரை அழைத்தாலும் பாஜகவுடன் கூட்டணி என சிலர் கூறுவார்கள். ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைத்ததில் எந்த தவறும் இல்லை. பாஜகவை அழைத்தால் பினாமி என்றும், அழைக்காவிட்டால் அழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள். என கூறினார். அதிமுகவினர் கை காட்டுபவர்களுக்கு அரசு வேலை என்ற செங்கோட்டையனின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கும் போது தகுதி அடிப்படையில் மட்டுமே அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!