In Mysore, national-level through ball games Going up to Jan 26 – 30.

பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் விடுத்துள்ள தகவல்:

இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பாக, பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்விதுறை நடத்தும் தமிழ்நாடு மாநில அளவிலான எறிபந்து தெரிவு போட்டிகள் 24.09.2017 அன்று பெரம்பலூரில் உள்ள இலப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் வயது மற்றும் பிரிவு வாரியாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியானது 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்டது. இதில் 12 மாணவர்கள் தெரிவுப்பெற்றனர். தெரிவுபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் 22.01.2018 முதல் 25.01.2018 வரை இலப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாம் முடிந்தவுடன் 26.01.2018 அன்று திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக கர்நாடகா மாநிலம் செல்ல உள்ளனர்.

இப்பயிற்சி முகாமில் பங்குபெறும் மாணவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர் எனும் இடத்தில் 26.01.2018 முதல் 30.01.2018 நடைபெற உள்ள தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த அணிக்கு பயிற்சியாளராக அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எஸ். நடராஜன், அணி மேலாளராக இலப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் பி.கண்ணன் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர், என தெரிவித்துள்ளார்.
.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!