In Perambalur, road workers are pressing Shangu the black flag to protest the demands

பெரம்பலூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி சங்கு ஊதும் போராட்டம் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர்கள் ரஜினி, ராமநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சி.சுப்பிரமணியன், விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கம், அனைத்துறை ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், சாலை பராபரிப்பு பணியை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு 41 மாத பணிநீக்க பாலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் ரூ.5200 – ரூ. 20,200 வழங்க வேண்டும், தர ஊதியம் ரூ. 1900 வழங்கிட வேண்டும்,

மாத ஊதியம், கருவூலம் மூலம் நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து ரெகுலர் பே சிஸ்டம் ஊதியம் வழங்க வேண்டும், பணிநீக்க காலத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பத்தினர் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் கருணாநதி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!