Increased sales of banned goods including Hans in Perambalur

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்கு, வெங்கடேசபுரம், காமராஜர் வளைவு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டதும், சாப்பிடுபவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பெரம்பலூரில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பெரம்பலூருக்கு ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் அதிக அளவில் பெங்களூருவில் இருந்து பெரம்பலூருக்கு சேலம் வழியாக கடத்தி வரப்படுகிறது. இந்த கடத்தலுக்கு அரசு பேருந்து நடத்துனர்களே உடந்தையாக உள்ளனர். குறிப்பிட்ட தொகை மாமூல் செலுத்தப்படுவதால் அதிகாரிகள், காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை.

புற்றுநோய், ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களை உண்டாக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் கள்ளத்தனமாக கடைகளில் விற்கப்படுவதால் கூடுதல் விலைக்கும் வாங்க தயராக இருக்கின்றனர்.

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படும் போதை வஸ்துக்கள் ஆத்தூர், பெரம்பலூர், அரியலூர், திட்டக்குடி, விருத்தாசலம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார் கோவில், அணைக்கரை கும்பகோணம், செந்துறை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இந்த கும்பல் வினியோகம் செய்து வருகிறது.

புகார் கொடுத்தாலும் உரிய நடிவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!