Kumbhabhishekam Agaramseegoor Arulmigu Ayyanar Temple near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயிலில் சித்திவிநாயகர், மாரியம்மன், மதுரைவீரன், நவக்கிரகம், முருகன், அய்யனார் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு தனித்தனி கோயில்களாக ஊர்பொதுமக்கள் நன்கொடையால் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டன. திருப்பணி வேலைகள் முடிந்ததை அடுத்து இந்தகோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் முன்பு யாகசாலை கட்டப்பட்டன

முதல் கால யாக பூஜை மங்கள இசையுடன் நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, அங்குரார்பணம், ரக்ஞாபந்தனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், பூர்ணாகதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை 2ம்கால மற்றும் 3ம் கால பூஜையும், இன்று காலை 7 மணியளவில் நான்காம் கால யாகபூஜை மகா தீபாராதனை உட்பட பூஜைகள் நடந்தன.

பின்னர் முதலில் விநாயகர், மாரியம்மன் கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுமார் 9 மணியளவில் யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை சுமந்து, வெடி மேளதாளங்களுடன் கோயிலை வலமாக வந்தனர். தொடர்ந்து அய்யனார், முருகன் கோயில் விமான கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டடு கும்பாபிஷேகம் நடைபெற்றுது. குழுமியிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது மஞ்சள் கலந்து புனிதநீர் தெளிக்கப்பட்டது.

பக்தர்கள் அனைவருக்கும் விபூதி, மஞ்சள் குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புளியோதரை, சர்க்கரை பொங்கல் பிரசாதங்கள் 3000 நபர்களுக்கு வழங்கப்பட்டன. செல்வமணி சிவாச்சாரியார், வரதராஜ் பட்டாட்சாரியார் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் குழு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தது.

மாலை 7 மணிக்கு விசேஷ அலங்கராத்துடன் வெடி, மேளதாளங்கள் முழங்க விநாயகர், அய்யனார் சுவாமி திருவீதி உலா, கும்பாபிஷேக ஏற்பாடுகளை அகரம்சீகூர் ஊராட்சி பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!