Learn basic swimming training camp for the summer term: Perambalur going on

model

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இராமசுப்ரமணியராஜா விடுத்துள்ள தகவல் :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டத்தின் கீழ் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பிரதி திங்கள் கிழமை தவிர அனைத்து நாட்களும் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் 01.04.2018 முதல் 14.04.2018 வரையிலும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 15.04.2018 முதல் 28.04.2018 வரையிலும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 29.04.2018 முதல் 12.05.2018 வரையிலும்,

நான்காம் கட்ட பயிற்சி வகுப்புகள் 13.05.2018 முதல் 26.05.2018 வரையிலும், ஐந்தாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 27.05.2018 முதல் 09.06.2018 வரையிலும், ஆறாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 10.06.2018 முதல் 23.06.2018 வரையிலும்

காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், 9.00 மணி முதல் 10.00 வரை. மற்றும் மாலை ; 3.00 மணி முதல் 4 வரை, 4.00 மணி முதல் 5.00 வரை, ஆகிய நேரங்களிலும் காலை, மாலை இருவேளையும் சிறந்த நீச்சல் பயிற்றுநரை கொண்டு 12 நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

12 வகுப்புகளில் அடிப்படை நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுத்தரப்படும். எனவே கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று பயன்பெறவும், நீச்சல பயிற்சி முழுமையாக கற்றுக்கொள்ளும் மாணவ,மாணவியர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.

உடல் திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர்- வீராங்கனைகளாக உருவாகவும், தேசிய,சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவும், பெரம்பலூர் மாவட்டத்ததைச் சேர்ந்தவர்கள் நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு நீச்சல் பயிற்றுநர் அன்பரசு 9965639606, 6380438835 என்ற எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 8220999499 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!