Life should not be sacrificed in the protest non violence: Stalin’s request

அறவழியில் போராட வேண்டுமே தவிர உயிர் தியாகம் செய்ய கூடாது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

காவிரி வாரியம் அமைக்கக்கோரி சேலத்தை சேர்ந்த இளைஞர் பிரபு தற்கொலை செய்துகொண்டார்.இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சேலத்தை சேர்ந்த இளைஞர் பிரபு தற்கொலை செய்து கொண்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழக உரிமைகளுக்காகவும், மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கவும் அறவழியில் போராட வேண்டுமே தவிர உயிர் தியாகம் செய்ய கூடாது. இளைஞர்களும், உணர்வாளர்களும் தமிழக மக்களுடன் அறவழியில் போராடி, உரிமைகளை மீட்க வேண்டும் என்பதே திமுகவின் எண்ணம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!