Military RSS to talk about. The leader must apologize: Mayawati’s assertion

ராணுவம் குறித்து கூறிய கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பகுஜன் ஜமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

முசாப்பர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில் “நாட்டுக்கான போரிட வேண்டிய நிலை ஏற்பட்டால் எல்லைகளுக்க படைகளை அனுப்ப ராணுவத்துக்கு 7 மாதங்கள் ஆகும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் 3 நாட்களில் எல்லைகளுக்கு படைகளை அனுப்ப முடியும்” என்று கூறினார். மோகன் பாகவத் கருத்துக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “ராணுவத்துடன் ஆர்.எஸ்.எஸ்.-ஐ ஒப்பிடுவது கலகத்தை ஏற்படுத்துவது மற்றும் அவமானம் படுத்துவதற்கு சமமாகும். எனவே மோகன் பாகவத் ராணுவம் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். படை மீது நம்பிக்கை இருந்தால் அவருக்கு அரசு செலவில் கமாண்டோ படைகள் ஏன்?” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!