Minimum age limit for liquor drinkers: Kerala Government decision

மது அருந்துவோருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21-ல் இருந்து 23-ஆக அதிகரிக்க கேரளா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கை தளர்த்தி வருகிறது. கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மது குடிப்போருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.கூட்டத்தில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அப்போது மது குடிப்போருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21-ல் இருந்து 23-ஆக அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2017 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர்.காம் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!