More than 40 people living in homeless rented house, Appeal home to Perambalur M.L.A., R. Tamilselvan

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் வசிக்கும் சுமார் 35 பெண்கள் உட்பட 40 க்கும் மேற்பட்டவர்கள் பெரம்பலூர் எம்.எல்.ஏவை சந்திந்து கொடுத்த மனு:

பாடாலூர் கிராமத்தை சேர்ந்த அவர்கள், சொந்த வீடு இல்லாததால், வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், தினசரி கூலிவேலைக்கு செல்வதால் மாத மாதம் வாடகை கொடுப்பதற்கே வருமானத்தில் ஒரு பகுதி செலவாகிவிடுவதாகவும்,

மேலும், விலைவாசி, குழந்தைகள் கல்வி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக செலவு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அதிக சிரமப்படுவாகதாவும், வீடற்ற தங்களுக்கு, பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து பயனில்லை என்பதால், தங்களுக்கு அரசு வழங்கும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து உதவும் படி பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்சசெல்வனை நேரில் அவரை சந்தித்து மனு கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும், இந்த மனுவே கடைசி மனுவாக இருக்கும், இதற்காக யாரும் எதற்கும் செலவு செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்த அவர், விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.

மேலும், வந்திருந்தவர்களில் அதிகமாக முதியோர்களும், குழந்தைகளும் இருந்ததால் மதிய உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்தார். பின்னர், மேலும், சிலர் முதியோர்கள், உதவித்தொனை மருத்துவ உதவிகள் கோரினர், அவர்களுக்கும், உதவுவதாக வாக்குறுதி அளித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!