New housing allocation for 138 beneficiaries by the Tamil Nadu Slum Clearance Board in Namakkal: Provision of Ministers

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழா, முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கும் விழாக்கள் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.

முதலாவதாக நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டாரம் மணப்பள்ளி ஊராட்சியில் ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் மணப்பள்ளி ஊராட்சியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து நாமக்கல் அரசு அண்ணா கல்லூரியில் ரூ. 4.86 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரத்து38. 82 சதுர மீட்டர் பரப்பளவில் 20 கூடுதல் வகுப்பறைகள், 5 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய 3 தளங்களை கொண்ட கூடுதல் கட்டடத்தைத் கட்டுவதற்கான பணியினையும் அமைச்சர்கள் பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தனர்.

இதனைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர்அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் நாமக்கல் நிலவங்கி பகுதி-4 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கான வீடு ஒதுக்கீடு உத்தரவுகளை 138 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!