North Indian woman who suffers mental health near Namakkal: Adding to Care Home

நாமக்கல் மாவட்டம், வேலக்கவுண்டன்பட்டியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடநாட்டு பெண் ராசிபுரம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வேலகவுண்டன்பட்டி கடை வீதியில் மன நலம் பாதித்த பெண் ஒருவர் சுற்றித்திரிவதை பார்த்துள்ளார். இதுகுறித்து உடனடியாக கலெக்டர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியை தொடர்பு கொண்டு வேலகவுண்டம்பட்டியில் சுற்றித்திரியும் மன நலம் பாதித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி நடமாடும் சிகிச்சை வாகனம் மூலமாக வேலகவுண்டம்பட்டி கடை வீதியில் அழுக்கு நிறைந்த 50 வயது மதிக்கத்தக்க வடநாட்டுப் பெண் அரை குறை ஆடையுடன் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார்.

அந்த பெண் குறித்து கடை வீதியில் விசாரித்ததில் அந்த பெண் கடை வீதிகளில் சுற்றித்திரிவதும் பீடி மற்றும் குளிர்பானம் கேட்டு பெற்று குடித்து கொண்டு ரோடு ஓரத்திலேயே ஒரு வாரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், புரியாத மொழி பேசும்,துர்நாற்றம் வீசும் மற்றும் மன நலம் பாதித்த அப்பெண் அனாதையாக திரிந்து வருகிறது என தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் அவரது ஜீப் டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் நடமாடும் சிகிச்சை ஊர்தி மூலம் வேலகவுண்டம்பட்டியில் இருந்து அந்த பெண்ணை மீட்டு ராசிபுரத்திலுள்ள மன நல காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!