On behalf of people with disabilities in Namakkal Welfare assistance of Rs 3 lakh 59 thousand worth of welfare: Ministers Provided

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் கல்வி படிக்கும், வேலைக்கு செல்லும், சுயதொழில் செய்யும் கால் இழந்தவர்களுக்கு இலவச நவீன செயற்கை வழங்கும் திட்டத்தின் கீழ் முட்டிக்கு கீழ் காலில்லாத 13 பேருக்கு ரூ. 2 லட்சத்து 34ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

மேலும் ரூ. 25 ஆயிரம் மதிப்பில் முட்டிக்கு மேல் கால் இழந்த 5 பேருக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும் ஆக மொத்தம் கால் இழந்துள்ள 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை அவயங்களை அமைச்சர்கள் வழங்கினர்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!