Perambalur Education District-level World performance Program Athletic Competition

பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திட்டத்தின்கீழ் தடகளப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரா;,வீராங்கனைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் பரிசுத்தொகையையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

2017-2018-ஆம் ஆண்டிற்கான பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்ர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டிகளை பெரம்பலூர்ர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் தொடங்கி வைத்தார்.

இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சாந்த 6, 7, 8-ம் வகுப்பு வரை பயிலும் 350 மாணவர்களும், 290 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

100மீ, 200மீ, 400மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல்; ஆகிய போட்டிகள் வகுப்பு வாரியாக மாணவ, மாணவியர்களுக்கு தனித் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

6-ம் வகுப்பு மாணவர்களுக்கான 100 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன், 200 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் அரும்பாவூர்ர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ச. சச்சின், 400மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் ஒதியம் வான்புகழ் வள்ளுவர்ர் பள்ளியைச் சார்ர்ந்த எம்.அபினாஷ், நீளம் தாண்டுதல் போட்டியில் இசாக் அகமத், உயரம் தாண்டுதல் போட்டியில் சில்லக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்குமார், குண்டு எறிதல் போட்டியில் ஒதியம் வான்புகழ் வள்ளுவர் பள்ளியைச் சேர்ந்த எம். சரவணவேல் ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.

6-ம் வகுப்பு மாணவியர்களுக்கான 100 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தக்ஷயா, 200 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் பரவாய் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி அ.தர்ஷினி, 400மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி இரா.கல்பனா, நீளம் தாண்டுதல் போட்டியில் சில்லக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வநாயகி, உயரம் தாண்டுதல் போட்டியில் மருவத்தூh; அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பாவனா, குண்டு எறிதல்; போட்டியில் வான்புகழ் வள்ளி மாணவி கவிபிரியா ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.

7-ம் வகுப்பு மாணவா;களுக்கான 100 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் வாகிசன், 200 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் – அ. ரஞ்சித் 400மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் பெரியம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். அருண், நீளம் தாண்டுதல் போட்டியில் பாடாலூர் அரசு ஆதிதிராவிடர்ர் நலப்பள்ளி மாணவர் பால்ராஜ், உயரம் தாண்டுதல் போட்டியில் சில்லக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தீபக் குண்டு எறிதல்; போட்டியில் ஒதியம் வான்புகழ் பள்ளி மாணவர் எம்.ஆகாஷ் ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.

7-ம் வகுப்பு மாணவியர்களுக்கான 100 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் தீபிகா, 200 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி, கே.கமலா, 400மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மஞ்சு, நீளம் தாண்டுதல் போட்டியில் சில்லக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிரிஜா, உயரம் தாண்டுதல் போட்டியில், ஜனனி, குண்டு எறிதல்; போட்டியில் பவித்ரா சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தைப் பெற்றனர்.

8-ம் வகுப்பு மாணவா;களுக்கான 100 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா; கேசவபிரசாத் 200 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் தந்தை ரோவா; மேல்நிலைப்பள்ளி, பெரம்பலுhh; ஆh;.ரமே‘;, 400மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் பரவாய் அரசு உயா;நிலைப்பள்ளி மாணவா; தா;மராஜ், நீளம் தாண்டுதல் போட்டியில் பாடாலூh; அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா; சு+h;யா, உயரம் தாண்டுதல் போட்டியில் பெரம்பலூh; அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா; அறிவுமதி, குண்டு எறிதல்; போட்டியில் புனித ஜோசப் பள்ளி மாணவா; ஹாpவெங்கடே‘; ஆகியோh; முதலிடத்தைப் பெற்றனா;.

8-ம் வகுப்பு மாணவியர்களுக்கான 100 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி காவியா, 200 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் எம். தினா, 400மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, நீளம் தாண்டுதல் போட்டியில், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீ கண்மணி, உயரம் தாண்டுதல் போட்டியில் சிவசங்கரி, குண்டு எறிதல்; போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அப்சரா ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஐயன், தடகளப் பயிற்றுநர் க.கோகிலா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!