Perambalur near the cars collide head-on collision accident: 6 injured: 3 cars damaged, Tree falling!


பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் விபத்துக்குள்ளானதால் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி கூடல் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், இவரது மனைவி சந்திரா மகன் கவிச்சக்ரவர்த்தி, உறவினர் சண்முகம் ஆகியோருடன் புதுச்சேரியிலிருந்து ஒரு இன்னோவா காரில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பட்டூர் பிரம்மா கோவிலுக்கு நாளை சாமி வழிபட சென்றுக் கொண்டிருந்தனர்.

காரை புதுச்சேரியை சேர்ந்த சந்திரமவுலீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் வந்த போது, எதிர் திசையில் போக்குவரத்து விதிகளுக்கு எதிராக ஒரு ஆம்னி கார் அதிவேகமாக சென்றுள்ளது.

இதனை கண்டதும் இனோவா கார் டிரைவர் சந்திரமவுலீஸ்வரன் திடீரென பிரேக் போட்டு காரை நிறுத்தியுள்ளார். இதில் நிலை தடுமாறிய கார் ஆம்னி கார் மீது மோதி, சாலையோர மரத்திலும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரவிச்சந்திரன், அவரது மனைவி சந்திரா, மகன் கவிச்சக்கரவர்த்தி உட்பட 5 பேரும் ஆம்னி காரை ஓட்டிச்சென்றவரும் என 6 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் விபத்து மீட்புப் படையினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே இனோவா கார் மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று அப்படியே முறிந்து வீழ்ந்தது. இதில் மரத்தின் கீழ நிறுத்தப்பட்டிருந்த மாருதி ஸ்விப்ட் கார் நொறுங்கி முற்றிலும் சேதமடைந்தது.

இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!