Perambalur on behalf of the cultural tourism in the near Siruvachur

பெரம்பலூர் : சுற்றுலாத்துறை மூலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் நடைபெற்ற சுற்றுலா கலைவிழாவை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி நேற்று தொடங்கி வைத்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த கோவிந்தராஜி கலைக்குழுவின் சார்பில் பரதநாட்டியம், கரகாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், கட்டக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் சிறப்பாக நிகழ்த்தி காட்டினர்.

மேலும், சுற்றுலா கலைவிழா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவாச்சூரை சேர்ந்த பொதுமக்களிடையே கோலப் போட்டிகளும் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து சிறப்பாக கோலமிட்டவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும், மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 500 நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், சுற்றுலா அலுவலர் சிவகுமார், உதவி சுற்றுலா அலுவலர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!