Plea to the Government to implement the projects reviewed in SC

பெரம்பலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர்களுக்கு மத்திய, மாநில அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், ஆட்சியர் வே.சாந்தா முன்னிலையில் தேசிய தாழ்த்தப்பட்டர் ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்தது

இக்கூட்டத்தில், அனைத்துத்துறைகளின் சார்பில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் பற்றிய விவரங்கள் குறித்து துறை வாரியாக அனைத்துத்துறை அலுவலர்களுடன்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை விவரம், துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விகிதம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக வழங்கப்பட்ட பசுமை வீடுகளின் எண்ணிக்கை,

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் பணிகள், வளா;ச்சிப் பணிகள், தொழில்துறையில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, தாழ்த்தப்பட்டோர்களுக்கான மாணவ, மாணவிகளின் விடுதிகளன் எண்ணிக்கை, செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயன்பெற்றுள்ள தாழ்த்தப்பட்டோர்களின் விவரம், வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் மூலமாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தும் பல்வேறுத் திட்டங்களை தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அனைத்துத்துறை அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆணையத் துணை தலைவர் அம்மனுக்கள் மீது உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 50 நபர்களுக்கு பிரதம மந்திரியின் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டது,

இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!