Plea to the public to set up a quarry near the Perambalur collector’s office to protest petition

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமையில் நடைபெற்றது.

காரை கிராமத்திற்கு உட்பட்ட மலையப்ப நகர் மற்றும் இராமலிங்கம் நகரைச் சேர்ந்த நரிக்குறவர் மற்றும் கலைக் கூத்தாடிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் ஆட்சியர் வளாக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அவரை தடுத்து நிறுத்தினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அனைவரையும் உள்ளே செல்ல அனுமத்தித்தனர். பின்னர் செனற அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், தாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகளான ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சி மலைப்பநகர் மற்றும் இராமலிங்கம் நகரில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருவதாகவும் காமராஜர் ஆட்சிக் காலத்தில் திருச்சி மாவட்டத்தோடு பெரம்பலூர் இருந்த போது அப்போது ஆட்சியராக இருந்த ஆர்.எஸ்.மலையப்பன் குடியிருக்க இடம் வழங்கி பின்னர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பட்டா வழங்கி வசித்து வருகிறோம்.

இந்நிலையில் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கல்குவாரி, கிரஷர் அமைவதாக கேள்விப்பட்டு உடனடியாக 12.3.2018 அன்று குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தோம், மேலும் 15.3.2018 அன்று லாரி மற்றும் பெரிய இயந்திரங்கள் மூலம் பணியை தொடங்க முயற்சி செய்தபோது அனைத்து மக்களும் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தியுள்ளோம்.

மேலும், எங்கள் பகுதியில் உள்ள எம்ஆர்.எப். டயர் தொழிற்சாலை இயங்கி வருவதால் கழிவுநீர் மற்றும் மாசுகள் ஏற்பட்டு எங்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

தற்போது எங்கள் பகுதியில் இரண்டு குழந்தைகள் ஊனமாக பிறந்துள்ளது. எனவே எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய வகையில் அமையவுள்ள கல்குவாரி மற்றும் கிரஷர் ஆலைகளை எந்த ஒருதுறையும் அனுமதி அளிக்காமல் எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர், மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!