Profit members in co-operative societies are given to members: Kunnam MLA Ramachandran

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பெங்கல் விழாவை முன்னிட்டு 2015 &-2016, 2016 &-2017ம் ஆண்டுகளுக்கான ஊக்கத் தொகை வழங்கும் விழா இன்று குன்னம் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி. ராமசந்திரன்

விழாவிற்கு, குன்னம் சட்ட மன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமசந்திரன் தலைமை வகித்து சங்க உறுப்பினர்களுக்கு, ஊக்க தொகையாக குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் 1340 பேருக்கு ரூ 33 லட்சத்து 57 ஆயிரத்து 134 வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அதிக உறுப்பினர்களை கொண்ட சங்கம், தொடங்கிய போது நாள் ஒன்றுக்கு 6ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியை செய்தது.

தற்போது 13 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. அதற்கு காரணம் உங்களின் தீவிர முயற்சியும் ஒத்துழைப்பும் ஆகும். ஊக்க தொகை லிட்டருக்கு 50 பைசா வழங்கப்படுகிறது. சங்கத்தில் கிடைக்கும் லாபம் முழுவதும் உறுப்பினர்களுக்கே திருப்பி வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களில் கிடைக்கும் லாபம் முழுவதும் உரிமையாளர்களுக்கே தான் போய் சேரும் என பேசினார்.

விழாவில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி முன்னிலை வகித்தார். முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன். அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அமுதாமுருகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இளங்கோவன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!