Provisional Certificates can be obtained on the website of Class X exams .

பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் – ஏப்ரல் 2018 ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்து மே-23 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அவற்றில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித் தேர்வர்ர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மார்ச் – ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறு கூட்டலுக்கு (Retotalling) மே. 26, வரை பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டல் கட்டணம் பகுதி – I மொழி(தமிழ்) -க்கு ரூ.305-யும், பகுதி – II மொழி (ஆங்கிலம்) -க்கு ரூ.305- யும், பகுதி – III கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் -க்கு ரூ.205-யும், பகுதி – IV விருப்பமொழிப்பாடத்திற்கு ரூ.205- ம் செலுத்தவேண்டும்.

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறு கூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

மார்ச் – ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும், என தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!