Puducherry Police chased a vehicle in Cuddalore : about murder case 3 arrest

புதுவை போத்தீஸ் அருகே, கொலை செய்து விட்டு, தப்ப முயன்ற மூவர் கைது மூவர் தப்பி ஓட்டம், இன்று காலை டவேரா காரில் , கடலூருக்குள் வேகமாக வந்த நிலையில் அதனை பின் தொடர்ந்த புதுவை காவல்துறையினர் கடலூர் உழவர் சந்தை அருகே பொது மக்கள் உதவியுடன் பிடித்தனர்.

காரில் வந்தவர்கள் புதுவையில் கொளஞ்சி என்பவரை கொலை செய்து விட்டு, தப்ப முயன்றது தெரிய வந்துள்ளது. இதில் சேவல் கொடி , சிவா, சேகர் என்ற மூவரை புதுநகர் காவல் துறையினர் பிடித்து விசாரனை மேற்கொண்டுள்ள நிலையில் மணி மற்றும் கண்ணன் ஆகிய இருவர் தப்பி ஓடினர்.

பிடிபட்ட வாகனத்தில் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க, வழி நெடுகிலும் 20க்கும் மேற்பட்ட விபத்துகளை ஏற்படுத்தி விட்டு வாகனத்தில் தப்ப முயற்சி செய்தனர். இதனால், புதுவை கடலூர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!