Pulsar crash kills youth; The boy was killed and the suicide case was filed

சென்னையில் 16 வயது மகனை பைக் விபத்தில் இழந்த தாய்க்கு, மகனை பைக் ஓட்ட அனுமதித்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் மீனா (40), இவரது மகன் ரோஹித் (16), +1 படித்து வருகிறார். ரோஹித் அடம்பிடித்தன் காரணமாக மீனா ரோஹித்திற்கு பல்சர் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். 16 வயதே நிரம்பிய ரோஹித் இந்த ரக பைக்கை ஓட்ட தகுதியில்லாதவர். இவருக்கு லைசன்ஸ் கூட எடுக்க வயது தகுதி கிடையாது. இந்த நிலையிலேயே ரோஹித் தனது பல்சரில் வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி பள்ளிக்கு சென்ற ரோஹித் மாலை தனது பள்ளி தோழி ஒருவரை தனது பைக்கில் வைத்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துள்ளார். பைக் அம்பத்தூர் எஸ்டேட் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது அங்கு ரோட்டை கடந்து கொண்டிருந்த திருமங்கலத்தை சேர்ந்த பாபு (30) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாபு துடிதுடித்து பலியானார். ரோஹித்தும், அவரது பள்ளி தோழியும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஹித்தும் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் விபத்திற்குள்ளான பல்சர் பைக் ரோஹித்தின் தாய் மீனா பெயரில் பதிவு செய்ப்பட்டிருந்தது. இதையடுத்து தனது 16 வயதே நிரம்பிபய மகனை பைக் ஒட்ட அனுமதித்தற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மீனா மீது 279, 304 (A),338,337 IPC & alter at 279,304 (A) 2counts, 337 Ipc. Sec 4 r/w 181 MV Act, sec 5 r/w 180 MV Act. ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக போலீசார் கடந்த மார்ச் 21ம் தேதி 18க்கு வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு தான் தண்டனை வழக்கப்படும் என எச்சரித்திருந்தனர். இந்நிலையில் மீனா மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிற்காக மீனாவிற்கு சுமார் 3 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மகனை இழந்து தவிக்கும் தாய்க்கு மேலும் இது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!