Rs 50 thousand farm loan waiver in Rajasthan: Vasundhara Raje announcement

ராஜஸ்தானில் ரூ.50 ஆயிரம் வரையிலான விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அண்மையில் அந்த மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ. தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து உஷாரான பா.ஜ. அரசு விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வதாக ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.

இதன்படி ரூ.50 ஆயிரம் வரையிலான கூட்டுறவு கடன்கள் தள்ளுபடியாகும். இதன் மூலம் 20 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். அதேசமயம் அம்மாநில அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இது குறித்து எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட் இது குறித்து கூறுகையில் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்று வேலை. பெரும்பான்மையான விவசாயிகள் அரசு வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கூட்டுறவு கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் குறைவான விவசாயிகளே பலன் அடைவார்கள் என்று கூறினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!