Salem Two persons dead and 13 injured in accident near Thoothukudi

தூத்துக்குடியில் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பஞ்சகாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் ஒரு வேனில் திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சரவணன் (25) என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார்.

நேற்றிரவு 10 மணியளவில் வேன் புறப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில், தூத்துக்குடி – எட்டயபுரம் ரோடு, கீழஅரசரடி டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கி, ரகுநாதன் மகன் நவீன் (23) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 14பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஓப்புலி மனைவி லெட்சுமி (50) என்பவர் உயிரிழந்தார். இவ்விபத்தில் காயம் அடைந்த 7பெண்கள், ஒரு குழந்தை உட்பட 13பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2017 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர்.காம் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!