Sportsmen can apply for Pandit Dhenadyal Upadhya National Sports Welfare Fund

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இராமசுப்ரமணியராஜா விடுத்துள்ள தகவல் :

மத்திய அரசின் புதிய திட்டமான பண்டிட் தீனதயாள் உபத்யாயா தேசிய விளையாட்டு வீரர் நல நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் தேசம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட முன்னாள் விளையாட்டு வீரர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ நிதியுதவி செய்திடும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அளவில் பங்குபெற்ற அல்லது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் பிரிவில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் கீழ்க்கண்ட வகையில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவராகிறார்கள்.

சிறந்த பாதிக்கப்பட்ட முன்னாள் விளையாட்டு வீரர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், முன்னாள் விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது அல்லது போட்டிகளில் பங்குகொண்டபோது காயம் ஏற்பட்டு அல்லது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு அதன் தரத்திறகேற்றவாறு நிதியுதவியளிக்கப்பட உள்ளது.

சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு இந்திய திருநாட்டிற்குப் பெருமை சேர்த்த பயிற்சியால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் அல்லது அவர்களது குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காகவும் பொருளாதார ரீதியாக சமுதாயத்தில் தனித்து செயல்படுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம், என தெரித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!