Sugarcane can be punishable for other plants: Perambalur Collector’s notice

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 2017-18 அரவை பருவம் 14.12.2017 முதல் துவங்கப்பட்டுள்ளது. இப்பருவத்தில் சுமார் 1,60,000 மெட்ரிக் டன்கள் அரவைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள கரும்பினை பிற கரும்பு ஆலைகளுக்கு கொண்டு செல்வதை தடை செய்திட வருவாய்த்துறை, போக்குவரத்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் அலுவலர்கள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு கரும்பு கடத்தப்படுவதை தடுக்க மருதையான் கோவில், பெரம்பலூர் நான்கு ரோடு, பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் நான்குரோடு அருகிலும் சுங்க சாவடிகள் அமைத்து கண்கானிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

சட்டத்திற்கு புறம்பாக கரும்பு கடத்தலில் ஈடுபடுவோர் மீது கரும்பு கட்டுபாட்டு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், கரும்பு போக்குவரத்து வாகனமும் பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அலுவலா;கள் மற்றும் கரும்பு துறையினர் மூலம் பெரம்பலூர் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பினை எடுத்து செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரும்பு கடத்தல் தொடர்பாக தகவல் தெரிவிக்க எறையூர் சர்க்கரை ஆலை கரும்பு அபிவிருத்தி அலுவலர் அ.இரவிச்சந்திரனை 9677447758 என்ற எண்ணிலும், எறையூர் கோட்ட கரும்பு அலுவலர் சுந்தரராஜனை 9677447725 என்ற எண்ணிலும், அகரம்சீகூர், லப்பைக்குடிக்காடு கரும்பு அலுவலர் காசிராஜா 9677755200 என்ற எண்ணிலும், பெரம்பலூர் கிருஷ்ணாபுரம் கரும்பு அலுவலர் நவநீதன் 9655247750 என்ற எண்ணிலும், வி.களத்தூர் கரும்பு அலுவலர் மனோகரன் 8489945529 என்ற எண்ணிலும், புதுவேட்டக்குடி கரும்பு அலுவலர் ஜி.சுரேஷ் 9677447727 என்ற எண்ணிலும், தாமரைப் பூண்டி கரும்பு அலுவலர் சி.சுப்ரமணியன் 9655247737 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசு சர்க்கரை ஆலையை ஒழுங்காக பராமரிக்கத்த தவறியதுடன், விவசாயிகள் வெட்டிய கரும்பிற்கு உரிய காலத்தில் பணம் வழங்கவில்லை என்பாதாலேயே வெளி ஆலைகளுக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!