Tamil Nadu farmers demonstrated at Perambalur to remove the banners of the ruling party

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே 1998 ஆம் ஆண்டு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி திருவுருவ சிலை நிறுவப்பட்டது. மேலும், அந்த இடத்தில் அடுத்தடுத்து டிஜிட்டல் விளம்பர பேனர் வைத்து சிலையை மறைத்து விடுவதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் மனுகொடுத்தும் ஆளும்கட்சியினர் வைக்கும் விளம்பரத்தட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியாத செயலை கண்டித்தும் தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்.ராஜாசிதம்பரம், பெ.மாணிக்கம், வி.நீலகண்டன், பெ.மணி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் வந்த காவல்துறையினர் சிலைக்குமுன் வைத்திருந்த பேனர்களை அகற்றினர். மேலும் சிலையை மறைத்து பேனர் வைக்கும் விரோத போக்கிற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!