T.M.C. Protest Demonstration on Feb. 29: Yuvraj’s Information

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் த.மா.கா., சார்பில் வரும் 29ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் நேற்றிரவு தெரிவித்ததாவது:

த.மா.கா., வளர்ச்சியை பலப்படுத்த தலைவர் வாசன் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அந்தவகையில் பிப்.3ம் தேதி முதல் மண்டலம் வாரியாக 5 மண்டலங்களில் வட்டார, நகராட்சி, பேருராட்சி அளவில் நிர்வாகிகள் கக்ஷட்டம் நடத்தி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பிப்.3ல் கோவையிலும் தொடர்ந்து தஞ்சாவுர், மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், சென்னையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களை பாதிக்கும் வகையில் 66 சதவீதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

தமிழகத்தில் நிதி பற்றாக்குறை என அமைச்சர் தெரிவிக்கிறார். இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு ஏன் சம்பள உயர்வு வழங்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 500 புதிய மதுபான கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வருமானம் எங்கே சென்றது?

தமிழகத்தில் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை முடக்கி வைத்துள்ளனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் த.மா.கா. சார்பில் வரும் 29ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மீனவர்கள் பிரச்னைக்கு இருநாட்டு மீனவர்கள் அதிகாரிகள் பேசி நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை ராணுவம் நிறுத்தி கொள்ள வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

விலை நிர்ணம் எண்ணெய் நிறுவனங்கள் செய்வதை நிறுத்தவேண்டும். கடந்த 43நாட்களில் டீசல் ரு.6ம் பெட்ரோல் ரு.10ம் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி உரிமையாளர்கள் டீசல் விலை உயர்வால் லாரிகளை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பஸ் கட்டண உயர்வு போன்ற மக்களை பாதிக்கும் விஷயங்களுக்கு ஏன் புதிதாக வர உள்ள கட்சிகள் அறிக்கைகக்ஷட வெளியிடாமல் மவுனம் காக்கின்றனர். மக்கள் சினிமா மோகத்தில் மயங்கிவிடக்ககூடாது, என தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரவிசந்திரராமவன்னி, வக்கீல் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!